கருமை நிறத்திற்கும் அழகுண்டோ!Singam SabariSep 7, 20181 min readகருமை நிறத்திற்கும் அழகுண்டோ எந்தன் கரிசல் காட்டழகியே கண்களோரம் மொழி தேடி கவியும் சொல்வேன் பெண்ணே உன் விழியின் ஒளிவழியில் ஒருகோடி நட்சத்திரம் நட ஆசையே மின்மினிக்கும் மின்னலுக்கும் இடையே விழியால் மின்சாரம் வீசியவளே என் நிழலும் எனை நெருங்கமறுக்குதே உன் நிழலின் ஒருபாதி நானாகக்கண்டே நிலவினை நானும் வெறுக்க கண்டேனே அமாவாசையிலும் உன் நிழலை தேடிதவித்தேனே ...Singam Sabari
Comments